டில்லி:

ணவக்கொலை  ஒரு தேசிய அவமானம் என்று  நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்,.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகள் குறித்து மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஆவேசமாக பேசினார்.

சாதிக்கொடுமை தொடர்பாக நேற்று திருமாவளவன் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றவேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்.

ஆணவப்படுகொலை குறித்து  மக்களவையில் இன்று பேசிய  தொல்.திருமாவளவன், “ஒரு முக்கியமான பிரச்னையை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இது ஒரு தேசிய அவமானம். honour killing என்கிற ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்பாேது நடந்து வருகிறது. இது ஒவ்வொருவரும் வேதனைப்படக்கூடிய, வெட்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் ஆணவக்கொலை என்பதாகும்.

அண்மையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாதி பிரச்சினை காரணமாக இளம்பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொண்ட கனகராஜ் என்கிற இளைஞ ரையும் அவரது குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.  அதுபோல ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கேசவ் மற்றும் ஹேமாவதி என்கிற இரண்டு பேரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர், உடன்பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள்.

நாட்டில் நடந்து வருகிற இதுபோன்ற செயல்கள் ஒரு கொடூரமான குற்றச்செயலாகும். இது பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்று கூறிய திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.