சென்னை

செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு விநாயக சதுர்த்தி விடுமுறையை மாற்றத் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது

நேற்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரர் சுப்ரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளிவந்தபோதே, விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17-ந் தேதி ஞாயிறு என்று இருந்ததை உடனே சுட்டிக்காட்டி திருத்தம் வெளியிடக் கேட்டோம். ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 தமிழக அரசு கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகளை அந்த மதத்தலைவர்களை ஆலோசித்து அறிவித்து விட்டு இந்துக்களின் பண்டிகைகள் பற்றிய விவரத்தைத் தன்னிச்சையாக  அறிவிக்கிறது.

தமிழக அரசு தமிழகத்தில் 88 சதவீதம் உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததைத் திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறை எனத் தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிடாவிட்டால், மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும்.

என்று தெரிவித்துள்ளார்.