புதுச்சேரியை உள்ளடக்கிய தமிழ் மண் என்பது, இந்தி ஆதிக்கத்தை எப்போதும் ஏற்காத ஒன்று!

இந்திக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை நடத்திய மண்தான் தமிழ் மண்! வரலாறு இப்படி நீள்கையில், இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் ஒரு முக்கியமான செயல், பெரிய கவனத்தைப் பெற்றுள்ளதோடு, கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட விதம்தான் அது.

இந்தி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு மண்ணில், தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடுகையில், அதில் முதலில் இடம்பெற்றிருந்தது இந்தி மொழி. இதுதான் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. அதேசமயம், பலர் பாஜகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதால், இந்தப் பட்டியலையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தான் தமிழ் மண்ணில் இன்னும் காலூன்றவில்லை என்ற நிலையிலும், அந்த மண்ணில் இந்தி மொழி பாசம் எதிர்ப்பை கிளப்பும் என்ற நிலையிலும், தனது நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெனாவெட்டாகவும் இருக்கிறது பாஜக.

எனவே, தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்கள் நிலையில் எந்தளவிற்கு உறுதியாகவும், தெனாவெட்டாகவும் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில்தான் தெரிந்துகொள்ள முடியும்!