டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது.

இந்த தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.