சென்னை: பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, சர்டிபிகேட் வழங்குவது இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசு பள்ளி தலைமை யாசிரியர்கள், பெற்றோர்களிடம் அதற்காக பணம் வசூலித்து வருகின்றனர். மேலும், பல பள்ளிகளில், பள்ளிகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலித்து வருகிறார்கள்.

அரசு பள்ளி தலைமையாசிரியர்களிடன் இதுபோன்ற செயல்கள் அரசுக்கு புகாராக சென்றுள்ளது. ஆனால், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில், பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களிடமோ, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது தமிழக தலைமைச்  இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 13ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில்,  பள்ளிகளை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவே, வேறு எந்த வகையிலோ தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்றும், பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்