லக்னோ:

தன் மனைவி டிம்பிள் யாதவைக் கூட அகிலேஷால் வெற்றி பெற வைக்கமுடியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர்.  எனினும் இந்த கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை.

இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இன்று பேசிய மாயாவதி, கன்னாவ்ஜ் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிம்பிள் யாதவ்.
இந்த தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு சோசலிஷ தலைவர் ராம் மனோகர் லோஹியா போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் முலயாம் சிங் யாதவும் வென்றார்.

இந்த தொகுதியில் 3.5 லட்சம் யாதவர்கள் வாக்குகள் இருந்தும், யாரும் டிம்பிளுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் அப்படியே விழுந்துள்ளன.

நாம் அமைத்த கூட்டணி வீணாகிவிட்டது. நமக்கு யாதவர்கள் வாக்குகள் விழவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியினர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் என்றனர்.