மும்பை:

பாஜக நிறைவேற்ற தவறிய வாக்குறுதிக்காக நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றஞ்சாட்டாதீர்கள் என முதல் தாக்குதலை கூட்டணி கட்சியான சிவசேனா தொடுத்துள்ளது.


சிவசேனாவின் கட்சி ஏடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சியை வார்த்தை ஜாலங்களால் எதிர்கொள்ள முடியாது.

கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வழங்க பாஜக அரசு தவறிவிட்டது. இதற்காக முந்தைய பிரதமர்கள் நேருவையோ, இந்திராகாந்தியையோ மோடி ஆட்சியாளர்கள் குறைகூறமுடியாது.

ளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.
விவசாயத்துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் பாஜக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் படி, ஒட்டுமொத்த உற்பத்தி 7.2 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.

விவாதங்களில் வார்த்தை பிரயோகம் செய்வதாலோ, விளம்பரங்கள் கொடுப்பதாலோ வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு ஏற்படுத்திவிட முடியாது.

உற்சாகம் இழந்து நிற்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள நிதி அமைச்சர்தான் வழி கண்டுபிடிக்க வேண்டும்.
வேலையில்லாத கோடிக் கணக்கான இளைஞர்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துத்தான் வாக்களித்துள்ளார்கள்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே முக்கிய திட்டமாக இருக்க வேண்டும்.
புதிய தொழிற்சாலைள், துறைமுகங்கள்,சாலை அமைப்பு, விமானம் மற்றம் போக்குவரத்து துறைகளில் முதலீடு தேவை.

இதுவே வேலை வாய்ப்பையும், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அதிகரிக்கும்.
விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் மராத்வாடா மண்டலத்தில் 315 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வேலை வாய்ப்பை உருவாக்கும் முக்கிய துறையாக விவசாயம் இருந்தது. அதனை செய்ய நாம் தவறிவிட்டோம். நாடு முழுவதும் விவசாயிகள் நிலைமை மோசமாகத் தான் உள்ளது என்று கடுமையாக எழுதப்பட்டுள்ளது.