சென்னை

பாஜக நிர்வாகியும் நகைச்சுவை நடிகருமான எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பதிப்பு வெளியிட்டார்  எனவே அவர் மீது பத்திரிகையாளர் புகார் அளித்தார்/  இதன் அடிப்படையில் வர் மீது வழக்குகள் பதியப்பட்டன.  தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்/

எஸ் வி சேகர் அந்த மனுவுடன் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பதிப்பு வெளியிட்டதற்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்பதாகப்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.  ஆயினும் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடாது எனப் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் மனு அளித்தது.   இன்று இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தீர்ப்பு அளித்துள்ளார்..

அந்த தீர்ப்பில்,

“நடிகர் எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது.  நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கி விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.   வழக்கின் தீர்ப்பை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும்”

என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.