ரோடு ஆக்கிரமிப்பு: நடிகர் சங்கத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

Must read

சென்னை,

தி.நகரில் கட்டப்பட இருக்கும் நடிகர் சங்க கட்டித்திற்கு தடை விதிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

அதில், பொதுபாதையை நடிகர் சங்கம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, புதிதாக கட்டடம் கட்ட கடந்த மார்ச் 31ந்தேதி  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில்.  நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நடிகர் சங்க கட்டிடத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அதில், நடிகர் சங்க கட்டிடம் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும், 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும் மனுவில் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள்  ஸ்ரீமன், அண்ணாமலை என்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கின் விசாரணையை தொடர்ந்து  சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு  நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article