சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் காரணமாக நெடுஞ்சாலையில் இருந்த கடைகளை அருகில் இருந்த கிராமத்துக்குள் மாற்றியது தமிழக அரசு.

இவ்வாறு கிராமத்துக்குள் மாற்றப்பட்ட  மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

பாமக தொடர்ந்த பொதுநல வழக்கின் காரணமாக உச்சநீதி மன்றம் மத்திய மாநில நெடுஞ்சாலை களில் உள்ள மதுக்கடைகளை அதிரடி மூட உத்தரவிட்டது.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே 500 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் செயல்படக்கூடாது. ஏற்கனவே இருக்கின்ற மதுபான கடைகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 31-ந் தேதி உத்தரவிட்டது.

இதன்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

இந்த கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் தாண்டியும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

 நெடுஞ்சாலை அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் மாற்றியது தமிழக அரசு.

இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். மதுக்கடைகளை அடித்து உடைத்தனர்.

இந்நிலையில்,  அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம மக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ளிட்ட 10 இடங்களில் திறக்க உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதித்து நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.