சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சர்கள் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவியை இழந்த நிலையில்,  பணபரிமாற்ற வழக்கில்  கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள , செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறது.

மேலும், தற்போதைய  திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை, தாமாகவே விசாரணைக்கு எடுத்து  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றுமுதல் அந்த வழக்குகளை மீண்டும்  விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்குகளை அவர் விசாரிக்க கூடாது என தமிழ்நாடு அரசும், லஞ்ச ஒழிப்பு துறையும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் , சுழற்சி முறையில் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.  அதனால், இந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. அவரும் பொன்முடி வழக்கை விசாரணை நடத்தி, அவரது சிறை தண்டனையை உறுதி செய்தார்.

இந்த நிலையில், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும்  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை இன்று முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளார். அதற்காக விசாரணை பட்டியலில் இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.