வாரனாசி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மசூதி வளாகத்தில் உள்ள இந்து கோவிலில் இந்து பெண்கள் வழிபாடு நடத்து வது தொடர்பான வழக்கு 22ந்தேதி விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். ஏற்கனவே ஞானவாபி மசூதி இந்து கோவிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று சர்ச்சை நடந்து வருகிறது. அதற்காக ஆதாரமாக மசூதி கட்டிடங்கள், கோவில் மதில்களை மறைத்து கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ஞானவாபி மசூதி உள்ளே சிவலிங்கம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இந்து பெண்கள் வழிபாடு நடத்த கோரி மனு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்கு  ஞானவாபி மசூதி தரப்பு கடுமையாக எதிர்த்திருந்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதற்கு  மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள்  நிராகரிக்க வேண்டும் எனவும்,  இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவும் வலியுறுத்தி வந்தது.

இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று  வாரணாசி  மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா தனது தீர்ப்பை வழங்கினார்.  தீர்ப்பில்,  இந்து பெண்கள் தொடுத்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்துள்ள வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் ஓராண்டு காலம் பிரார்த்தனை செய்ய இந்து பெண்களின் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. பெண்களின் மனு செப்டம்பர் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை மசூதிக்குள் கணக்கெடுப்பு நடத்திய பெண்களின் மனு நீதிமன்றத்தால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றார்.

முன்னதாக, இந்த உத்தரவு காரணமாக, உத்தரபிரதேசத்தில்  பதட்டம் நிலவக்கூடிய பகுதிகளிலே பாதுகாப்பு இன்று அதிகரிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக வாரணாசியிலே பல இடங்களிலே தடை உத்தரவு மற்றும் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.