டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் , கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர் பந்த் (டபிள்யூ கே), தினேஷ் கார்த்திக் (டபிள்யூ கே), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், ஒய் சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் (அக்டோபர் ) ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த போட்டிகள்  அக்டோபர் 16ந்தேதி தொடங்கி  நவம்பர் 13 வரை  நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே  ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில்,  இன்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டனாக ராகுல் மற்றும் விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  காயத்திலிருந்து மீண்ட ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஜடேஜா ஆடவில்லை. அதனால், அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்திய அணியின் ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷமி மெயின் அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி வீர்கள் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.