ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி

Must read

ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி

சென்னை:
தங்கள் சட்டமன்ற குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக அதிமுக (சசிகலா) அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிறிது நேரத்துக்கு முன்பு கிண்டி ராஜ்பவனில், ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி, சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு அவருடன் வந்திருந்த ஜெயக்கமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “எங்களுக்கு பெரும்பான்மையான 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆகவே எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநரை கோரினோம். அவர் அழைப்பார் என்று நம்புகிறோம்” என்றார்.

More articles

Latest article