புதுச்சேரி

த்திய அரசால் எய்யப்படும் அம்புதான் ஆளுநர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளார். அவரை புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான.ரவிக்குமார் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர் பின்னர் செய்தியாளர்களிடம்,

“கர்நாடகா மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றே கூறி வருகின்றனர். அணையைக் கட்டமுடியாது என்பதுதான் உண்மையான நிலையாகும்.  இந்த அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகத்துக்குச் சாதகமாகவே உள்ளது.

தமிழகத்தில் காவிரி பிரச்சினையை முழுமையாக அறிந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளார். தமிழக அரசு இந்த, அணை விவகாரத்தில் முழுமையாக நமது உரிமையைக் காக்கும் வகையில் செயல்படுகிறது.

ஆளும் திமுகவால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக விமர்சிக்கப்பட்டுள்ளார். மாநில ஆளுநர் என்பவர் தனிப்பட்ட நபரல்ல. அவர் மத்திய அரசால் எய்யப்படும் அம்புதான். அதுவே அவரது செயல்பாட்டுக்கு மத்திய அரசே காரணமாகிறது. எய்தவர் இருக்க அம்பை நொந்து பயன் கிடையாது.

என்று தெரிவித்துள்ளார்.