சீர்காழி: பூமிக்கடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால்தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.  ஆனால், தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது என முன்னாள்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் தொடர்ந்து,  இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருப்பணியின்போது, பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள் ஆகியவற்றை தனிஅறையில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  சீா்காழி சட்டைநாதா் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால்தான் அரசு கையகப்படுத்த வேண்டும். தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது.

தமிழகத்தில் 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு 38,000 கோயில்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளா்கள் இந்து கோயிலுக்குள் வருவது இல்லை. ஆனால், இந்து கோயில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கடந்த காலங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை கலைக் கூடத்தில் வைத்துள்ளனா். இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும் என்றாா்.