சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் அனுமதி வழங்காத நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டுவர சட்ட ஆலோசனை வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு,  ஆன்லைன் ரம்மி தங்க முட்டையிடும் வாத்து, அதன்மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு வருமானம் வருகிறது,  மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம் கிடைக்கிறது, அதனால், அதை ஒழிக்க யார் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்டுள்ள தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழக அரசு இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு வழங்கியது. தொடர்ந்து,   ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது  ஆன்ரைன் அவசர சட்டம்   காலாவதியாகி உள்ளது.  அதுபோல கவர்னரும் இதுவரை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இது கடுமையான  விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் தொடர்பாக திமுக அரசு, ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, அவர்களின் கருத்துக்களையும், சட்டப்பிரிவுகளை ஏற்று, மீண்டும் ஆன்லைன்  ரம்மி   கேம்களை தடை செய்வதற்கான சட்டம் சட்டப்பேரவையில்   அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநரன் ஒப்புதலுக்கு அனுப்பட்ட நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகஅரசின் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆலோசனை வழங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஆன்லைன் ரம்மி தங்க முட்டை இடும் வாத்து,  அதனால்தான் அதை ஒழிக்க மத்தியஅரசு சட்டம் ஏற்றாமல் அரசு இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

சந்துரு ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில் வருமான வரியை கோடிக்கணக்கில் மத்திய அரசு பெறுகிறது என்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டின் கீழ் 28 சதவீதம் வரை வசூலிக்க உரிமையை வழங்கியுள்ளது  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில் வருமான வரியை கோடிக்கணக்கில் மத்திய அரசு பெறுகிறது. அதில்  மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டின் கீழ் 28 சதவீதம் வரை வசூலிக்க உரிமையை வழங்கியுள்ளது. அதனால்தான் மாநிலங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியிருப்பதுடன்,  இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு  சட்டத்தின் மூலமாக தடையை கொண்டு வராமல் இருப்பதற்காக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

மேலும்,  இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் தடை விதிக்க மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தங்க முட்டை இடும் வாத்தை யார் தான் வெட்டி சமைக்க முன்வருவார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.