சென்னை:  தமிழகத்தில் பால், நெய் விலையைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. சாதாரண விவகாரங் களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்த விலை உயர்வு குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். ஆவின் பொருட்கள் தொடர்ந்து விலைகள் உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மாநில அரசு மீதான அதிருப்தியை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.‘ கடந்த மாதம் பால் விலைகளை மாற்றிய அமைத்து.

இந்த சூழலில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூபாய் 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. ஆவின் நெய் விலை உயர்வை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அடுத்த பேரிடியாக வெண்ணெய் விலையையும் இன்று ஆவின் நிர்வாகம் அதிகரித்து உள்ளது. உப்பு கலக்காத அரை கிலோ வெண்ணையின் விலை ரூபாய் 250 இல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 100 கிராம் வெண்ணையின் விலை 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நெய் நேற்று விலை உயர்ந்த நிலையில் இன்று வெண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…