புதுடெல்லி:
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கு 46 பேர் ‘தேசிய நல்லாசிரியர் விருது’க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.

இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாட உள்ளார்.