மும்பை:
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

20212 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைரஸ் மிஸ்த்ரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிய ஒரு நம்பிக்கைக்குரிய வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.