ஹைதராபாத்:
ந்தியாவின் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரம் ஹைதராபாதில் துவங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓபன் கியூப் நிறுவனம் இரண்டு இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டுகள் அல்லது கடன் அட்டைகளை செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்க காயின்களை பெறலாம். 5 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் இயந்திரத்தில் நிரப்பப்பட்டு, பூஜ்யம் 5 கிராம் முதல் 100 கிராம் வரை 8 வகையான தங்க நாணயங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.