ரூ. 736ல் விமான பயணம்! கோ ஏர் நிறுவனம் அறிவிப்பு!

Must read

நாடு முழுவதும் ரூ.736 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில், விமான சேவை அளிக்கப்போவதாக கோ  ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மலிவான விமான சேவை வழங்கிவரும் இந்த நிறுவனம், தனது அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும், இந்த குறைந்தபட்ச விலை கட்டணத்தை அறிவித்துள்ளது..
1
இதற்கான முன்பதிவு நவம்பர் 24ம் தேதி வரை செய்யப்படும்.
ஆனால், இந்த குறைந்தபட்ச விமானக் கட்டணத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, ரத்து செய்ய முடியாது. ரத்து செய்தாலும், கட்டணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது.
இன்னொரு முக்கிய அறிவிப்பையும் கோ ஏர் அறிவித்துள்ளது.                       ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, நவம்பர் 24ம் தேதி வரை அனைத்து கோ ஏர் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article