னாஜி

கோவாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மூன்று வழிபாட்டுத்தலங்கள் அழிப்பு முயற்சிக்கு முதல்வர் மனோகர் பாரிகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெற்கு கோவாவில் உள்ள செயிண்ட் ஜோஸ் மற்றும் குடி பரோடா சர்ச்சுகளில் சிலுவைகள் உடைக்கப்பட்டன.  மற்றும் பிரார்த்தனை கூடங்களில் உள்ள இருக்கைகள் உடைக்கப்பட்டன.  சுர்சோரம் என்னும் இடத்தில் உள்ள ஒரு இந்துக் கோயில் தாக்கப்பட்டுள்ளது.

காவல் துறை மேலும் ஏதும் வழிபாட்டுத்தலங்களில் தாக்குதல்கள் நடக்காமல் இருக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது,  ஆனால் சில காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கு உட்பட்டவர்களை காவலில் வைத்து விட்டு ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.

அனைத்து தாக்குதல்களுமே ஆட்களற்ற நேரத்தில் நடந்துள்ளது,  வழிபடுபவர்கள் இல்லாமலோ அல்லது காவல் துறை செக் போஸ்ட் மூடிய பிறகோ தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இது குறித்து முதல்வர் மனோகர் பாரிகர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

”இந்த மாநிலம் அமைதியாக உள்ளது.  அந்த அமைதியைக் குலைக்க யாரோ செய்யும் சதியே இந்த தாக்குதல்கள்.  இவை அனைத்தும் தேவையற்ற பதற்றத்தை மாநிலத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுபவை.   இவை காவல்துறையின் கண்டுபிடிப்பு இல்லை,  எனக்கு தோன்றுவது. “  என முதல்வர் கூறி உள்ளார்