டில்லி :

ந்திய பிரதமர் மோடி பலவீனமானவர் என காங்., துணைத் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பகுதியான காஷ்மீரை, இந்தியா நிர்வகித்து வரும் பகுதி என குறிப்பிட்டிருந்தது.

இதற்கு அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,

மோடி பலவீனமான இந்திய பிரதமர் என்று கூறி உள்ளார்.

மோடியின் அமெரிக்க பயனத்தின்போது,  ஜூன் 26 ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தலைவன் சையது சலாஹூதீனை சர்வதேச பயங்கர வாதி என குறிப்பிட்டு அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. அதில் காஷ்மீரை இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் என குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை குறிப்பிடுவதற்காகவே அமெரிக்கா இந்த சொல்லை பயன்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

2010 – 13 ல் காங்., ஆட்சியில் இருந்த போதும் அமெரிக்கா இந்த சொல்லை பயன்படுத்தி உள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி உள்ள ராகுல், அமெரிக்காவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு மவுனம் காக்கிறது.

இந்தியாவின் பிரதமர் ஒரு பலவீனமானவர் என குறிப்பிட்டுள்ளார்.