பான் எண்ணுடன் ஆதார் எண்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டில்லி,

ருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்‌ எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த மாதம் 1ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் விலக்கு அளிப்பது குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய அரசின் அறிவிப்புக்கு பின், 7 கோடியே 36 லட்சம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 30 கோடி பான் எண் இருக்கும் நிலையில், இதுவரை 7 கோடியே 36 லட்சம் பேர் மட்டுமே  பான் எண்களுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறி உள்ளது.

மேலும்,  மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரிச்சட்டம் பிரிவு 139AA-ன் கீழ் யாருக்கு எல்லாம் ஆதார், பான் இணைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

1. என்ஆர்ஐ

2. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள்

3. 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள்

4. ஜம்மு & காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள்

ஆகியோருக்கு ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


English Summary
Aadhaar number link with pan number: Central government's new announcement