பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் அறிவித்துள்ளார்.

ஊரடங்கின் போது அத்யாவசிய சேவைகள், தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும் ஆனால் பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.