புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என்றும் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந் நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை முகாம் அமைத்து, பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து இன்று புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 7 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

110 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.