பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட உள்ளது. எனினும் காலை 6 முதல் 10 மணி வரை அத்யாவசிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்படும். பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது:  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்யாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.