புதுடெல்லி: பரவலான கண்டனங்கள் எழுந்ததையடுத்து, டெல்லி கலவரம் தொடர்பாக, முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு புத்தகத்தை திரும்பப் பெற முடிவுசெய்துள்ளது டெல்லியிலுள்ள ப்ளூம்ஸ்பெரி பதிப்பகம்.

‘டெல்லி கலவரம் 2020’ என்ற பெயரில், இந்துத்துவ ஆதரவாளர்களால், முஸ்லீம்களை பழிசுமத்தி எழுதப்பட்டது ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தது ப்ளூம்ஸ்பெரி நிறுவனம்.

ஆனால், இதுதொடர்பாக உலகளாவிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து, அப்புத்தகத்தை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது ப்ளூம்ஸ்பெரி நிறுவனம்.

முன்னதாக நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, முன்பு ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாரதீய ஜனதாவில் ஐக்கியமான கபில் மிஸ்ரா முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இந்தாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். அவற்றில், பெரும்பாலானோர் முஸ்லீம்கள்.