புதுடில்லி: டாக்டர் ஷஷி ரஞ்சன் மற்றும் டெபயன் ஷாஹா தங்களது தாய்நாட்டின் சுகாதார அமைப்புகளுக்கு உதவும் தங்களுடைய ஆராய்ச்சியைத் துவங்க அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து டெல்லியின் எய்ம்ஸ்க்கு திரும்பியுள்ளனர்.

கோவிட் -19 வைரஸை (கொரோனா வைரஸ்) வெற்றிகரமாக கொல்ல, அவர்கள் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பம் இப்போது ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) ஆய்வகத்தால் சோதிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளதால், அவர்களின் கனவு நனவாகியுள்ளது. மற்ற முறைகளைப் போலல்லாமல், இந்த புதிய தனித்துவ தொழில்நுட்பம் ஒரு வேதியியல் மற்றும் கதிர்வீச்சு இல்லாத மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே தொழில்நுட்பமாகும். இது அமெரிக்க எஃப்.டி.ஏ வழிகாட்டுதல்களின்படி ஐ.எஸ்.ஓ 10993, உயிர் இணக்கத்தன்மைக்கு கட்டுப்பட்டு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் முற்றிலும் பாதுகாப்பானதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

“சில உகந்த நிலைமைகளின் கீழ் சாதாரண குழாய் நீரை வைரஸ் எதிர்ப்பு தன்மையுடையதாக மாற்றக்கூடிய நீரின் தனித்துவமான பண்புகளை அடிப்படை இயற்பியலைப் பயன்படுத்தி பெரிதாக்கியுள்ளோம். SARS CoV -2-வை அழிக்க சுற்றுச்சூழலுக்குள்இந்த நீரின் மைக்ரான்  அளவுள்ள நீர்த்துளிகளை இந்த வைரஸ் எதிர்ப்பு நீரிலிருந்து உருவாக்கப்படுகின்றன. அவற்றை காற்றில் தெளிப்பதன் மூலம் காற்றில் ஏரோசல் அல்லது மேற்பரப்பில் உள்ள COVID-19 வைரஸ் மற்றும் பிற கிருமிகளை அளிக்க முடியும். இதன் மூலம், வைரஸ் மற்றும் எதிர்காலத்தில் நிகழவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற ஆபத்துகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்,”என்று பெர்சாபியனின் இணை நிறுவனர் டெபயன் ஷாஹா கூறினார்.

இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடி, ஒரு ‘ஆத்மனிர்பர் பாரதத்திற்கு’ தயாராகி வருவதால், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வளர்ச்சியையும் மீண்டும் உயர்த்த நமது பொருளாதாரம் முழு திறனுக்கும் வருவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் நம் குழந்தைகளின் கல்வி கேள்விக்குரியதாகியுள்ளது. எனவே, இவர்கள் தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் இதற்க்கு தீர்வு காண இறங்கியுள்ளனர். அதன்படி, இந்த கண்டுபிடிப்பை இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் பயன்படுத்தலாம் என்கின்றனர். ஏனெனில் அங்கு அவர்களுக்கு இது தேவைப்படுகிறது, மேலும் குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களுக்கு வேறு சிறந்த வழி இல்லை என்கிறார்கள்.

பள்ளியில் எல்லா நேரங்களிலும் குழந்தைகள் முகமூடி அணிவதை உறுதி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். ஆனால், எப்படியாயினும், குறிப்பாக இடைவெளிகள், மதிய உணவு நேரம் மற்றும் விளையாட்டு நேரங்களில் முகக் கவசம் நீக்கப்பட வேண்டியிருக்கும் என்பதால், இது சவாலானதாக இருக்கும். பள்ளிகள் திறக்கும்போது, அவை இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்தபடியே தொற்று பரவுவதற்கான இடங்களாக மாறக்கூடும். இணையம், கணினி வசதிகள் இல்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க முடியாத மற்றும் அவர்களின் அடிப்படை கல்வி உரிமையை இழந்து கொண்டிருக்கும் கல்வி முறையில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான டிஜிட்டல் பிளவு இப்போது முக்கியத்துவம் பெறுவதால் நாம் இனி அமைதியாக இருக்க முடியுமா?

கொரோனா வைரஸ், உயிர் அபாயங்கள், பயோ – பயங்கரவாதம், புதிய வைரஸ்களின் பரிணாமம் மற்றும் கொரோனா வைரஸ் புதிய விகாரங்களாக உருவாகும் சாத்தியக்கூறுகள் ஆகியவை நம்முடைய பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக இருவரும் நம்புகின்றனர், இந்த விஷயத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தடுப்பு மருந்துகளும் பயனற்றதாக ஆகலாம். எனவே, குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விஞ்ஞானிகள் ஆண்டு முழுவதும் நம்மைத் தடையின்றி பாதுகாக்க வழிமுறைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.

“எனவே, ஐசிஎம்ஆர் சோதனை செய்த இவர்களின் கண்டுபிடிப்பான ‘Airlens Minus Corona-indoors’ இந்த புதிய கொரோனா வைரஸ் மற்றும் பிற கொடிய வைரஸ்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது மனிதர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. அபாயகரமான இரசாயனங்கள், தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அல்லது கதிர்கள் போன்றவை இல்லாதது. இச்சாதனம் வெறும் தண்ணீரில் இயங்ககே கூடியது என்பதால், ரசாயனங்கள், ஆல்கஹால் போன்றவற்றைப் போலல்லாமல், இது ஒருபோதும் பற்றாக்குறையாக இருக்காது. எனவே, நம் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பொதுப் பள்ளிகளிலும் கூட பயன்படுத்தக் கூடிய அளவில் மிகவும் மலிவானதாக இருக்கும். “என்று பெர்சாபியனின் இணை நிறுவனர் டாக்டர் சஷி ரஞ்சன் கூறினார்.

பெர்சாபியன் புதுமைகள் பிரைவேட் லிமிடெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த புரட்சிகர தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் குழு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கும் ஒத்துழைக்கிறது. ‘பெர்சாபியன்’, ‘பெர்’ – ஒவ்வொன்றும் மற்றும் ‘சேபியன்’ – மனித வாழ்வு, நோக்கத்தால் இயக்கப்படுவதால், இந்த தொழில்நுட்பம் அதிர்ஷ்டமுள்ள சிலருக்கு மட்டுமே என்றில்லாமல், தண்ணீரைப் போல அனைவருக்குமானது. அனைவருக்கும் பகிரப்படும்.

Thank you: Times of India