கணவர் ரிதேஷ் இயக்கத்தில் ஜெனிலியா… ‘வேத்’ படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்…

Must read

தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று திரையுலகில் வலம் வந்த ஜெனிலியா தமிழில் கடைசியாக 2011 ம் ஆண்டு வேலாயுதம் படத்தில் நடித்தார், அதன் பின் 2012 ம் ஆண்டு ரிதேஷ் தேஷ்முக்-கை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகனான ரிதேஷ் தேஷ்முக் இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் ஒன்றிரண்டு இந்தி மற்றும் மராத்தி படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டி வந்த ஜெனிலியா இப்போது மீண்டும் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் ஜெனிலியா, தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக் இயக்க மராத்தி மொழியில் தயாராகும் ‘வேத்’ படத்தில் கதாநாயகியாக திரையுலகில் ரீ-என்ட்ரி ஆக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article