சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

நெல்சன் இயக்கம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வந்தது, கதாநாயகி பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று நிறைவடைந்தது.

இன்று கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்துக் கூறி விடை பெற்றார் விஜய்.

இந்தப் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார்.

நாயகன், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்க இருக்கிறது.