நாகை: நாகை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.டஸ்டலாலின்   மாவட்டத்திற்கான  6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும், நாகை அவுரி திடலில் 105 புதிய பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன்,   39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து,  நாகை மாவட்டத்தில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

நாகையில் ரூ.82 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நாகை மாவட்ட வளர்ச்சிக்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1) வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தென்னடார் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்
2) காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க, வேலைவாய்ப்புகள் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்
3) விழுந்தமாவடி, வானவன்மாதேவி, காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்
4) தெற்கு பொய்கைநல்லூரிலும், கோடியக்கரையிலும் தலா ரூ.8.50 கோடி மதிப்பில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்
5) 150 ஆண்டுகால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சிக் கட்டிடம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும்
6) நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் இருக்கும் பல்வேறு வடிகால்கள், வாய்க்கால்கள், மதகுகள், இயக்கு அணைகள் ரூ.32 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்

* ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித பயணிகளுக்காக நங்கநல்லூரில் ரூ.65 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்.

* நாகை தெற்கு பொய்கைநல்லூரில் 3 அடுக்குகள் கொண்ட பன்னோக்கு பேரிடர் மையங்கள் அமைக்கப்படும்.

* வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ.250 கோடி செலவில் சிப்காட் ஆலை அமைக்கப்படும்.

* காவிரி டெல்டா பகுதிகளில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

* நாகை தெற்கு பொய்கைநல்லூரில் 3 அடுக்குகள் கொண்ட பன்னோக்கு பேரிடர் மையங்கள் அமைக்கப்படும்.

* விழுந்தமாவடி, வானமாதேவியில் ரூ.12 கோடியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.

* நாகை நகராட்சி கட்டடம் பழமை மாறாமல் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று கூறினார்.