சென்னை: அமைச்சர் நாசர் தமிழ்நாடு டிஜிபி ஆகிவிட்டாரா?  என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு நடத்தியது. அதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படும் என்று விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ?

திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே..,

அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்..?

வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன்.

DVAC- ஐ முடுக்கி விடுங்க…”

என்று பதிவிட்டுள்ளார்.