மா.பா.வுக்கு பொருளாதாரமே தெரியாது; வரிகள் உயர்த்தப்படும்! நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன்

Must read

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று கூறிய  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசு திவாலாகும் நிலையில்  உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் கடந்த 10ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரழிந்து உள்ளதாக குற்றம் சாட்டி, வெள்ளை அறிக்கை வெளியிட்ட திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தற்போது அரசு திவாலாக இருப்பதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில்தான் சொத்துக்கள் அதிமகாக உள்ளது, அதனால்தான் தமிழகத்திற்கு கடன் நெருக்கடி அதிகமாகவுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கு பதில்  கூறிய,  முன்னாள் அதிமுக அமைச்ச்ர  மாஃபா பாண்டியராஜன், ”குறைந்த வட்டியிலேயே அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது.சொத்துக்கள் அதிகமாக உள்ளதால்தான், கடன் அதிகமாக தருகிறார்கள் .எனவே, கடன் வாங்குவது தவறில்லை, ஆனால், என்ன வட்டி விகிதத்தில் வாங்குகினோம் என்பதை வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர்கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியளார்கள்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார், வெள்ளை அறிக்கை சம்பந்தமாக வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார் என்று காட்டமாக கூறியவர், வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.  இதற்கும் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.

திமுக தனது  தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றவர், தற்போது தமிழக அரசுக்கு  வருவாய் இல்லாமல் அரசாங்கம் திவாலாக உள்ளது. எனவே வரியை உயர்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பொறுப்பற்ற ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசின் நிதி நிலையை மாற்றுவதற்கு, மக்களிடம் கருத்து கேட்டு, நிபுணர்களிடம் விவாதித்து பின்னர் ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்துவோம்,

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article