டெல்லி: பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? என மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உடனே பதில் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

போலந்து நாட்டில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு குமரியை சார்ந்த செவித்திறன் குறையுடைய சமீஹா பர்வீன் என்ற பெண் தகுதி பெற்றார். ஆனால், அவரை போலந்துக்கு அனுப்ப மத்தியவிளையாட்டு ஆணையம் மறுத்துள்ளது. இதை எதிர்த்து, பர்வீன் தரப்பில்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  இன்று நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்களில் மேலும் நான்கு பேர் ஆண்கள் என்பதால், அவருடன் ஒரு பெண்ணை  இணைத்து அனுப்ப முடியாது என்று கூறியதுடன், இது தொடர்பாக விரிவாக மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரியது.

ஆனால்,அதை ஏற்க மறுத்த நீதிபதி, போட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதால், அதற்கு அவகாசம் வழங்க முடியாது என்று உத்தரவிட்டதுடன்,  நாளைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், நீதிமன்றமே  நேரடியாக உத்தரவிட நேரிடும் என கூறினார்