பெங்களூர்:

ர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது காவல்துறை யினர் தேசத்துரோக வழக்கு மற்றும் அவதூறு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறை சோதனை குறித்து ஊடகங்களிடம் தெரிவித்து, போராட்டத்தை உருவாக்கிய தாக சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில், கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தரா மையா, குமாரசாமி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும்  பெங்களூரு நகர போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களின்போது, நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வந்தது. அப்போது, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்து ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னதாகவே, இது தொடர்பாக சில ஐபிஎஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாகவும், குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், மூக ஆர்வலர் மல்லிகார்ஜூன் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின்பேரில்,  குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம், அவதூறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பெங்களூரு நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.