த்திய பிரதேச மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.

அங்கு 2 முறை முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கை ஓரம் கட்டி விட்டு முதல்வர் ஆனார்  கமல்நாத்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாதுகாப்பான ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லியில் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பது சிங்கின் கனவு.

முதல்வர் கமல்நாத்துக்கும், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்குக்கும் எப்போதுமே  ஏழாம் பொருத்தம்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிங்குக்கு அண்மையில் ஒரு சவால் விடுத்தார்-கமல்நாத்.

‘காங்கிரஸ் வெல்ல முடியாத தொகுதியில் திக்விஜய்சிங் இந்த முறை போட்டியிட வேண்டும்’’ என்பது கமல்நாத்தின் சவால்..

அதிர்ந்து போனார் திக்விஜய் சிங். எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘’தலைவர் ராகுல்காந்தி   கட்டளையிட்டால் எந்த தொகுதியிலும்  நிற்கிறேன் என்று சமாளித்தார்-திக்விஜய்.

இப்போது நிஜமாகவே திக்விஜய் சிங்கை –காங்கிரசால் வெல்ல முடியாத போபாலில் நிறுத்தியுள்ளது- காங்கிரஸ் மேலிடம்.

30 ஆண்டுகளாக போபால் தொகுதி  பா.ஜ.க.வின் கோட்டை.

கடைசியாக 1984 – ஆம் ஆண்டு அந்த தொகுதியில் காங்கிரஸ் வென்றது. அதன் பிறகு பா.ஜ.க. வேட்பாளர்கள் தான் ஜெயித்து வருகிறார்கள்.

திக்விஜய் சிங் நிற்பதால்  வி.ஐ.பி. தொகுதி ஆகி விட்டது-போபால்.

அவரை எந்த விதத்திலும் ஜெயிக்க விட்டு விடக்கூடாது என்பது பா.ஜ..க.மேலிட திட்டம்.அவரை எதிர்த்து சாமியார் பிரக்யாவை நிறுத்தலாம் என்று  ஆரம்பத்தில் முடிவு செய்தது-பா.ஜ.க.

இப்போது திக்விஜய் சிந்கை எதிர்த்து முன்னாள் முதல்வர் சவுகானை களம் இறக்க முடிவு செய்துள்ளார்- அமீத்ஷா.

வயதான காலத்தில் முன்னாள் முதல்வர்களை மோத விட்டு –இரு கட்சிகளின் தலைமையும் வேடிக்கை பார்க்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

—பாப்பாங்குளம் பாரதி