கான்பூர்

ம்மை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜக செயலர் கூறியதாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் இருந்தே மூத்த தலைவர்கள் ஓரம் கட்டபட்டு வந்துள்ளனர். இது பல பாஜக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கியது. பிரதமர் மோடியின் அரசியல் குரு என சொல்லப்பட்ட அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் அமைச்சரவை மற்றும் முக்கிய பொறுப்புக்களும் அளிக்கப்படவில்லை.

மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அவருக்கு போட்டியிட  வாய்ப்பு அளிக்கப் படவில்லை. அவருக்கு பதிலாக அவரிடம் தேர்தல் மேலாளராக பணி புரிந்த தற்போதைய பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பாஜக மூத்த தலைவரான முரலி மனோகர் ஜோஷிக்கும் தேர்தல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறப்பட்டது. ஆனால் இன்று அவர் கான்பூர் தொகுதி மக்களுக்கு, “அன்புள்ள கான்பூர் தொகுதி வாக்காளர்களே, பாஜகவின் நிர்வாக செயலர் திரு ராம்லால் என்னிடம் இன்று நாக்பூர் தொகுதியிலோ அல்லது வேறெங்குமோ பொட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.