திண்டுக்கல்:

வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொல்லப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல். தண்ணீர் பந்தம்பட்டியில் வீடு உள்ளது. வீட்டின் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் இன்று இரவு ஆண்டிவேல் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.