சென்னை:
மிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக்குழு சார்பில் வெள்ள முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் தொடங்கவுள்ள நிலையில், வெள்ள அபாயம் ஏற்படும் சூழல்களை எதிா்கொள்ள விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, பேரிடர் மீட்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி இன்று காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த ஒத்திகையின் போது, வெள்ள அபாயம் குறித்த தகவல் பரிமாற்றம், தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக தகவல்கள் பெறும் முறைகள், அபாய ஒளி எழுப்பி பாதிப்புகளைத் தடுப்பது போன்ற அம்சங்கள் செய்து காட்டப்படும். மேலும், குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்வுகள் செய்து காண்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.