டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என உறுப்பினரின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறிய நகரங்களில்குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் 27ந்தேதி தொடங்கி வைத்தார்.  உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம்  நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது.  இதையடுத்து தமிழ்நாட்டிலும் வேலூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் சிறியரக விமானம் இயக்கப்படும் வகையில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  வேலூர், சேலம், ஓசூர், நெய்வேலி, தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்பட  பல மாவட்டங்களில் விமான நிலையம் அமைக்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும்,  சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வேலூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ல் விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை விமான சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடுபாதை பணி நிறைவு: வேலூர் விமான நிலையம் 2021 ஏப்ரலில் செயல்படுமா?