சென்னை:  மத்தியஅரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூருக்கு விமானம்  இயக்கப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்தியஅரசு அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு 2021 வேலூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு இடையே சிறிய ரக விமானங்கள் மூலம் சேவையை ஏற்படுத்திய மத்திய விமான போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில், உபயோகத்தில் இல்லாத விமான நிலையங்கள் உதான் திட்டம் மூலம் இணைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  கடந்த ஆண்டு (2019)   ஏப்ரல் 27ந்தேதி  குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அதன்படி தமிழகத்தில் சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை, சேலம், சென்னை திருச்சி  இடையே சிறிய ரக விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, வேலூர், தஞ்சாவூர் இடையே விமான சேவை தொடங்கும் வகையில், அங்கு விமான நிலையத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், கொரோனா காரணமாக பணிகள் முடங்கி உள்ள நிலையில், தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி உள்ளது.

வேலூரில் சிறிய ரக விமானம் இறங்கும் வகையில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பணிகள் நடைபெற்று வருகினற்ன. இநத் விமான நிலையம்  வேலூரில்,  அப்துல்லாபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, வேலூரில் அடுத்த ஆண்டு (2021) விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே  உதான் திட்டத்தின்படி திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை நடைபெறும் என  ஏற்கனவே மத்திய அரசு முடிவு  அறிவித்து ள்ளது குறிப்பிப்படத்தக்கது.