நீதிநிலை நாட்டப்பட்டுள்ளது: மு க ஸ்டாலின் கருத்து

Must read

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக  திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ” சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. முன்பு நீதிபதி குன்ஹா தந்த தீர்ப்பு அப்படியே நிலைநாட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.” என்றார்.

More articles

Latest article