கூவத்தூரில் 144 தடையாணை: ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Must read

 

சென்னை:

கூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடையாணை பிறப்பித்ததாக காஞ்சி மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறினார்.

இதைத் தொடர்ந்து கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை உள்ள பகுதிகளில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூவத்தூர் பகுதியிலும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

கூவத்தூர் ரிசாட்டில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம் எல் ஏக்களை சந்திக்க சென்ற ம பா பாண்டியராஜனிடம் 144 தடை உத்தரவு செய்து அங்குள்ளவர்களை வெளியேற்றி விடுகிறோம் என்று காவல்துறை  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  தமிழக ஆளுனரை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆளுனர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article