சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பித்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று  வெளியிட்ட அறிக்கையில், ”வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்து குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நாட்டில் நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பிக்க வைத்திருக்கும் இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் வந்திருந்தால் தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த ராமதாஸ், இப்போதும் கூட இந்தத் தீர்ப்பின் மூலம் சசிகலா முதலமைச்சராகும் பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருப்பயுள்ளதாக கூறியுள்ளார்.