சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறக்கப்படுகிறது என சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்  தடை பட்ட நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிகிறது. இதையொட்டி  சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள்  தொடங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

தற்போது கடைகள் அமைக்கும் பணி முடிவடைந்து, பட்டாசுகள் சேமித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறத.  வரும் 27ஆம் தேதி முதல் பட்டாசுகள் செயல்பாட்டு வரும் என்றும்,  காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 80% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் 100% ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுமென சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்கம் தெரிவித்துள்ளது.