டில்லி

த்திய நிதித்துறை செயலருக்கு தீபாவளி பரிசாக வந்த இரு தங்க கட்டிகள் குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என “தி ஒயர்” செய்தி நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

மத்திய நிதித்துறையில் செயலராக பதவி வகிப்பவர் ஹஷ்முக் ஆதியா.   இவருடைய பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.    கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த போது அவருக்கு முக்கிய ஆலோசகராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.   இவரைப் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை ‘தி ஒயர்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் காணப்படுவதாவது :

கடந்த 2016 ஆம் வருடம் தீபாவளி சமயத்தில் ஹஷ்முக் ஆதியாவின் இல்லத்துக்கு ஒரு பரிசுப் பார்சல் வந்துள்ளது.   அந்த சமயத்தில் அவர் வீட்டில் இல்லை எனச் சொல்லப்படுகிறது.    அந்த பார்சலில் தலா 20 கிராம் எடையுள்ள இரு தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.    அது யார் அனுப்பியது என்ற விவரம் அதில் காணப்படவில்லை.  அரசு உத்தரவின்படி அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு இது போல அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்கள் அரசு கஜானாவில் ஒப்படைக்கப்பட வேண்டும்.   அதையொட்டி ஹஷ்முக் இந்த இரு தங்கக் கட்டிகளையும் கஜானாவில் ஒப்படைத்து விட்டார்.

இது போல விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போது அது குறித்து விசாரணை நடத்தி அனுப்பியவர்களை கண்டறிவது வழக்கம்.    ஆனால் இந்த விவகாரத்தில் ஹஷ்முக் எந்த ஒரு விசாரணையும் நடத்த வேண்டும் என கேட்கவில்லை.   அதே நேரத்தில் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியும் இது குறித்து எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.

இந்த தங்கக் கட்டிகள் தற்போது வங்கி ஊழல் சர்ச்சையில் உள்ள நிரவ் மோடி அனுப்பி வைத்தாகவும்  அந்த தங்கக் கட்டிகளை ஹஷ்முக் அரசு கஜானாவில் அளித்துள்ளதாகவும் வந்துள்ளது.  ‘தி ஒயர்’ செய்தி நிறுவனம் இது குறித்து ஹஷ்முக் ஆதியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.   அதற்கு அவர் “அது போல ஒரு பரிசை அந்த குறிப்பிட்ட காலத்தில் பெறவில்லை.   தவறாக சொல்லப்படும் கட்டுக்கதைகளை வைத்து நீங்கள் எப்படி செய்தியகளை தயாரிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ‘தி ஒயர்’ செய்தி நிறுவனம் மேலும் இரு கேள்விகளை நேற்று கேட்டுள்ளது.    முதலாவதாக தீபாவளி பரிசாக வந்ததாக தங்கள் அலுவலகத்தில் இருந்து ஐந்து தங்கக் கட்டிகள் அரசு கஜானாவுக்கு கொடுக்கப்பட்டதா என்பதும் இரண்டாவது அந்த தங்கக் கட்டிகள் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதை ஏன் உங்கள் அலுவல்கம் தெரிவிக்கவில்லை என இரு கேள்விகள் எழுப்பியது.    அதற்கு ஹஷ்முக் தேசிய விரிவான ஒரு பதிலை ஈ மெயில் மூலம் நேற்று அனுப்பி உள்ளார்.

அவர் தனது பதிலில் ”தீபாவளி சமயத்தில் எனக்கு சில விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வந்தன.  அவைகளை அரசு நன்னடத்தை விதிகளின்படி நான் பெற்றுக் கொள்ளக் கூடாது.   அந்த பரிசுப் பொருட்கள் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் எனது வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளன.   அதனால் என்னால் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப முடியவில்லை.   அவற்றை அனுப்பி  வைத்தது யார் என்பதை இதுவரை என்னால் கண்டறிய முடியவில்லை.

அதனால் நான் அதை அரசு கஜானாவில் அளித்து விட்டேன்.   அவர்கள் அதை சட்ட விதிகளின் படி ஏலம் விட்டு விடுவார்கள்.   நான் அனுப்பிய பரிசுகளின் விவரம் இதோ:

1.       ஒரு புதிய ஐஃபோன் 7

2.       தலா 20 கிராம் எடையுள்ள இரு தங்கக் கட்டிகள்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.