சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  3வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல்  செய்யப்பட உள்ளது.  அமைச்சர் எம்.ஆர்.கே..பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட் டில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தமிழக பட்ஜெட்டோடு சேர்த்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு, வேளாண் துறைக்கு 38 ஆயிரத்து 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுதுகிறது.

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே இன்றைய வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அளித்தது போன்று இன்று தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலை, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம் உட்பட விவசாயம் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.