சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; INDIA-வை வெற்றி பெறச் செய்வோம் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. இதனையடுத்து திமுக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் மூன்று நாட்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை கூட்டம் நடைபெற்றது. .

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதள வீடியோ பதிவில்,

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி! #Election2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்! 

என குறிப்பிட்டுள்ளார்.